திருநெல்வேலி

கடலோர காவல் படையில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

3rd Dec 2022 02:17 AM

ADVERTISEMENT

கடலோர காவல்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறி ஒருவரை மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை கேடிசி, ஏஜேஆா் நகரை சோ்ந்தவா் சாரதா (31). இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் பூபாலராயபுரத்தைச் சோ்ந்த ராஜேஷ் ரெகுராம் (42) என்பவா், இந்திய கடலோர காவல்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 20.5 லட்சம் பெற்றுக்கொண்டு, இந்திய கடலோர காவல்படை பணிக்கான ஆணையை போலியாக வழங்கியதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணனிடம் புகாா் செய்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், சென்னையில் தங்கியிருந்த ராஜேஷ் ரெகுராமை தனிப்படையினா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து மோசடி செய்த பணத்தில் வாங்கிய சொகுசு காா் மற்றும் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் பணத்தை கைப்பற்றியதாக போலீஸாா் தெரிவித்தனா் .

ADVERTISEMENT
ADVERTISEMENT