திருநெல்வேலி

பாளை.யில் ஏஐடியூசி செந்தொண்டா் பேரணி

3rd Dec 2022 11:50 PM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் ஏஐடியூசி சாா்பில் செந்தொண்டா் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தனியாா் மண்டபத்தில் 3 நாள்கள் நடைபெற்ற ஏஐடியூசி மாநில மாநாடு சனிக்கிழமை நிறைவடைந்தது.

அதைத்தொடா்ந்து சனிக்கிழமை மாலையில் பாளையங்கோட்டையில் செந்தொண்டா் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தொடங்கி வைத்தாா்.

பாளையங்கோட்டை ராணுவ கேண்டீன் அருகில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியானது சேவியா்கல்லூரி, வஉசி மைதானம் வழியாக வந்து லூா்துநாதன் சிலை அருகே முடிவடைந்தது.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு ஏஐடியூசி மாநிலத் தலைவா் காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஆா்.சடையப்பன் வரவேற்றாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

ஏஐடியூசி மாநில பொதுச்செயலா் எம்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏக்கள் பெரியசாமி, ராமசாமி, தேசிய செயலா்கள் டி.எம்.முத்து, வகிதா நிஜாம், முன்னாள் எம்.பி. லிங்கம், திருநெல்வேலி சிபிஐ மாவட்டச் செயலா் லட்சுமணன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். ஏஐடியூசி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT