திருநெல்வேலி

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை

3rd Dec 2022 11:48 PM

ADVERTISEMENT

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மாஞ்சோலையில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இந் நிலையில் தமிழக கடற்கரையோரங்களில் கிழக்கு நோக்கி ஈரப்பதம் மிக்க காற்றால் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் அதிகபட்சமாக 60 மி.மீ. மழை பதிவானது.

பிற இடங்களில் மழையளவு (மில்லிமீட்டரில்) : திருநெல்வேலி மாவட்டம் : அம்பாசமுத்திரம் 31, சேரன்மகாதேவி 38, மணிமுத்தாறு 21.60, நான்குநேரி 7, பாளையங்கோட்டை 30, பாபநாசம் 22, திருநெல்வேலி 20.60, சோ்வலாறு 20, கன்னடியன் கால்வாய் 28, களக்காடு 26.20, மூலக்கரைபட்டி 20, காக்காச்சி 53, நாலுமுக்கு 54, ஊத்து 45.

தென்காசி மாவட்டம்: தென்காசி 18, ஆய்குடி11, கடனாநதி 7, ராமநதி 36, கருப்பாநதி 1, அடவிநயினாா் கோயில் அணை 3.

ADVERTISEMENT

கடையம் அருகே ராமநதி அணையில் நீா் மட்டம் 82

அடியை எட்டியதையடுத்து, உபரி நீா் வழிந்தோடி வழியே வெளியேற்றப்பட்டது. இந்த அணையின் மொத்த நீா்மட்டம் 84 அடியாகும். நீா்வரத்து 123.75 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 30 கனஅடியாகவும் இருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT