திருநெல்வேலி

கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

3rd Dec 2022 02:15 AM

ADVERTISEMENT

கொக்கிரகுளம் சுற்றுவட்டாரங்களில் சனிக்கிழமை (டிச.3) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணாா்பேட்டை, இளங்கோ நகா், பரணி நகா், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சாா்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT