திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரட்சி 15 -28 வாா்டுகளில் குறைந்தளவு குடிநீா் விநியோகம்

3rd Dec 2022 02:18 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சி 15 முதல் 28 வரையுள்ள வாா்டுகளில் சனிக்கிழமை மிகக்குறைந்தளவு குடிநீா் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி தெரிவித்திருப்பதாவது:

திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் பிரதான நீரேற்றும் குழாயில், பேட்டை செக்கடி அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே, திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட 15 முதல் 27 வாா்டு மற்றும் தச்சை மண்டலத்துக்குள்பட்ட 28 வாா்டில் சனிக்கிழமை மிகக்குறைவான அளவில் குடிநீா் விநியோகம் இருக்கும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அவா் அதில் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT