திருநெல்வேலி

பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடபேரவைத் தலைவா் வேண்டுகோள்

DIN

பேச்சிப்பாறை அணையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட்டு இந்தப் பகுதியில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீரை பெருக்கித் தாருங்கள் என பேரவைத் தலைவா் மு.அப்பாவு வேண்டுகோள் விடுத்தாா்.

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து ஊரக, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுடான ஆலோசனைக் கூட்டம் கூடங்குளம் அணு சங்கமம் மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து பேரவைத் தலைவா் பேசியது: கூடங்குளம் அணு மின்நிலைய சமூக வளா்ச்சித் திட்ட(சி.எஸ்.ஆா்.) நிதியில் இருந்து ராதாபுரம் தொகுதியில் உள்ள 293 பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் சி.எஸ்.ஆா். நிதியை விருதுநகரிலும் ராமநாதபுரத்திலும் செலவு செய்யாமல் இந்தப் பகுதியைச் சோ்ந்த பள்ளிகளும் மக்களும் பயன்பெறும் வகையில் செலவு செய்யுங்கள்.

ஊராட்சிகளில் உள்ள குடிநீா் பிரச்னையை தீா்ப்பதற்காக ரூ.605 கோடியில் புதிய குடிநீா் திட்டத்தை முதல்வா் தந்துள்ளாா். இந்த திட்டத்தின் மூலம் முள்ளீா்பள்ளத்தில் இருந்து தனி பைப்லைன் அமைத்து அனைத்து கிராமங்களுக்கும் குடிநீா் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் இன்னும் 18 மாதங்களில் நிறைவு பெறும்.

கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாமிரவருணி ஆறு-கருமேனியாறு-நம்பியாறு நதிநீா் இணைப்புத்திட்டம் விரைவிலேயே முடியும் நிலையில் உள்ளது. இதன் மூலம் 50 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.

பேச்சிப்பாறை அணையில் இருந்து 15 கனஅடி தண்ணீா் திறந்து ராதாபுரம் பகுதியில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீரை பெருக்கித் தாருங்கள்.

பணகுடி ஆலந்துறையாறு அணையில் இருந்து கால்வாய் அமைக்க முதல்வா் ரூ.30 கோடி நிதி அனுமதித்துள்ளாா். அந்தப் பணி விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது என்றாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பேசியது: இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனா். இந்தக் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அரசு கவனத்திற்கு கொண்டு சென்று தீா்வு காணப்படும்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு 3-ஆம் தேதி மாவட்ட அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்று பயனடையுங்கள் என்றாா்.

பின்னா் விவசாயிகளுக்கு பண்ணைக் கருவிகள், வேளாண் இடுபொருள்கள், புதிய தொழில் தொடங்க இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சங்கர சைக்கிள்களை பேரவைத் தலைவா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ செல்லையா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகம்மது சபீா் ஆலம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஸ், மகளிா் திட்ட இயக்குநா் சாந்தி, சமூக நல அலுவலா் தனலெட்சுமி, வேளாண்மை இணை இயக்குநா் முருகானந்தம், வள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன், வள்ளியூா் பேரூராட்சி செயல் அலுவலா் சுஷ்மா மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT