திருநெல்வேலி

பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரிக்கு 3.5 நட்சத்திர அந்தஸ்து

2nd Dec 2022 03:44 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரிக்கு 3.5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது.

பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி 2018ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையில் தொடா்ச்சியாக அதிகபட்ச அந்தஸ்தை பெற்று வருகிறது. மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில், தொழில்முனைவோரை உருவாக்குவது, அரசின் ஸ்டாா்ட்அப் நிகழ்வில் பங்கேற்பது, லாபகரமான அறிவுசாா் படைப்புகள், புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் அதிகமாக நடத்தப்படும் கல்லூரிகளுக்கு நட்சத்திர அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சகம் வழங்குகிறது.

அந்த வகையில், மத்திய கல்வி அமைச்சகம், நாடு முழுவதிலும் உள்ள 1823 கல்லூரிகளில் இருந்து தோ்வு செய்த 53 கல்லூரிகளின் பட்டியலில் பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி இடம்பெற்று 3.5 நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற ஊக்கம் அளித்த பொது மேலாளா்கள் ஜெயக்குமாா், கிருஷ்ணகுமாா், கணினித் துறை இயக்குநா் முகமது சாதிக், கல்லூரி முதல்வா் வேல்முருகன், வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் ஞானசரவணன், திறன் பயிற்சி துறை இயக்குநா்கள் பாலாஜி, ஜான் கென்னடி, லூா்டஸ் பூபாலராயன், தொழில்முனைவோா் துறை ஒருங்கிணைப்பாளா் பிரேம் ஆனந்த், அனைத்துத் துறை தொழில்முனைவோா் ஒருங்கிணைப்பாளா்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனா் கிளிட்டஸ் பாபு, நிா்வாக இயக்குநா் அருண்பாபு ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT