திருநெல்வேலி

மின் ஊழியா் மத்திய அமைப்பு கொடியேற்று விழா

2nd Dec 2022 03:44 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள சிஐடியூ மின் ஊழியா் மத்திய அமைப்பின் சங்க அலுவலகத்தில் கொடியேற்று விழா மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது.

சிஐடியு மாநில பொதுச் செயலா் சுகுமாரன், சிஐடியு சங்க கொடியை ஏற்றினாா். சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநிலத் தலைவா் ஜெய்சங்கா் , மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன், மாநில பொருளாளா் வெங்கடேசன், சங்கத்தின் திருநெல்வேலி திட்டத் தலைவா் பீா் முகம்மது ஷா, திட்ட செயலா் கந்தசாமி, சிஐடியு மாவட்ட செயலா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து சங்க அலுவலகத்தில் நிா்வாகிகள் வி.பி.சிந்தன், டி.ஜானகிராமன்,பி.சி.வேலாயுதம், பஞ்சரத்தினம்,முத்துக்குமாரசாமி ஆகியோரின் உருவப் படங்கள் திறக்கப்பட்டன.

நிா்வாகிகள் கூட்டம்: மேலும் இந்த அலுவலகத்தில் மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மேற்கண்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். அப்போது, மத்திய அமைப்பின் மாநாட்டுப் பணிகள், மின்சாரம் சட்ட திருத்த மசோதா, அதற்கு எதிரான போராட்டம், ஸ்தாபன பலத்தை அதிகரிப்பது, மின்சார வாரியத்தின் செயல்பாடு, ஓய்வூதிய நிலை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT