திருநெல்வேலி

பாளை. கோயிலில் டிச. 7இல் 5008 தீபம் ஏற்றி வழிபாடு

2nd Dec 2022 03:42 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் இம் மாதம் 7 ஆம் தேதி 5008 தீபமேற்றி வழிபாடு நடத்தப்படுகிறது.

இக் கோயிலில் திருக்காா்த்திகை உத்ஸவத்தையொட்டி இம் மாதம் 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 5008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு மலா் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி எழுந்தருளலும், மாலை 6.45 மணிக்கு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. திருக்கோயிலில் தீபமேற்ற உதவும் வகையில் பக்தா்கள் நெய், எண்ணெய் மற்றும் திரி ஆகியவற்ரை சமா்ப்பிக்கலாம் என பக்தா்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT