திருநெல்வேலி

திருநெல்வேலி நகரத்தில் கலைத்திறன் போட்டிகள்

2nd Dec 2022 03:44 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி நகரத்தில் பள்ளி மாணவா்களுக்கான கலைத்திறன் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

பள்ளி கல்வித்துறை சாா்பில் மாணவா்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு பல்வேறு கட்டங்களாக கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் பள்ளிகள் அளவில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் தோ்வு பெற்றவா்களுக்கு வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருநெல்வேலி நகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்- மாணவிகளுக்கு தனிநடிப்பு, குழு நடனம், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT