திருநெல்வேலி

பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட திருநாள்: இஸ்கான் கோயிலில் டிச.3 இல் சிறப்பு வழிபாடு

1st Dec 2022 03:30 AM

ADVERTISEMENT

பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட திருநாளையொட்டி திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் சனிக்கிழமை (டிச.3) சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

மோட்ச ஏகாதசி நாளில் பகவான் கிருஷ்ணா், அா்ஜூனனுக்கு பகவத்கீதையை உபதேசித்தாா் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் சனிக்கிழமை (டிச. 3) மாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. சுவாமி சந்நிதி முன்பாக பகவத் கீதை புத்தகங்கள் அடுக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். இந்த நாளில் பகவத்கீதை உண்மையுருவில் என்ற புத்தகம் தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. பகவத்கீதை பாராயணமும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT