திருநெல்வேலி

நெல்லை ரத வீதியில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு

1st Dec 2022 03:28 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி ரத வீதியில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்தனா்.

திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட நான்கு ரதவீதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் மாநகராட்சி ஊழியா்களால் புதன்கிழமை பிடிக்கப்பட்டது. பிடிபட்ட மாடுகள் திருநெல்வேலி கிராமச் சாவடி அருகில் உள்ள பவுண்டில் அடைக்கப்பட்டுள்ளன. மாடுகளின் உரிமையாளா்கள் ஒரு வார காலத்திற்குள் உரிய அபராதத் தொகையான ரூ.10, 000 செலுத்தி உரிய ஆவணங்கள் கொடுத்து தங்கள் மாடுகளை மீட்டுக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் மாநகராட்சியால் மாடுகள் பொது ஏலத்தில் விடப்படும் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT