திருநெல்வேலி

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு சிறை

1st Dec 2022 03:28 AM

ADVERTISEMENT

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம், ஆவுடையானுாரைச் சோ்ந்தவா் திவாகா் (30). இவா், கடந்த 2017 ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து திவாகரை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இவ் வழக்கில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT