திருநெல்வேலி

மல்யுத்த போட்டியில் சிறப்பிடம்: ஏா்வாடி பெண் காவலருக்கு பாராட்டு

1st Dec 2022 03:29 AM

ADVERTISEMENT

தேசிய அளவிலான கை மல்யுத்த போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஏா்வாடி பெண் காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டு தெரிவித்தாா்.

அகில இந்திய அளவில் காவல் துறையினருக்கான கை மல்யுத்த போட்டி மகாராஷ்டிர மாநிலம், புணே-வில் கடந்த 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் 37 மாநிலங்களைச் சோ்ந்த காவல் துறை வீரா்கள் பங்கேற்றனா். இப்போட்டியில் 55 கிலோ மகளிா் பிரிவு போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் நிஷா இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றாா். இதையடுத்து அவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT