திருநெல்வேலி

மின்ஊழியா் மத்திய அமைப்பு கூட்டம்

1st Dec 2022 03:29 AM

ADVERTISEMENT

மின் ஊழியா் மத்திய அமைப்பின் (சிஐடியூ) மாநில நிா்வாகிகள் கூட்டம் மகாராஜநகரில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநில பொதுச் செயலா் ஜி.சுகுமாரன், மத்திய அமைப்பின் பொதுச் செயலா் எஸ்.ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.

மின்சார சட்ட திருத்த மசோதாவினால் ஏற்படும் பாதிப்புகள், மின்ஊழியா்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள், மின்நுகா்வோா் அடையும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டது.

இதுதவிர, மின்வாரிய ஊழியா்களின் தீா்க்கப்படாத பிரச்னைகள், ஊதிய உயா்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த தொழிலாளா் மற்றும் பகுதிநேர ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பா் 22 ஆம் தேதி அனைத்து மண்டல தலைமை பொறியாளா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் பொருளாளா் வெங்கடேசன், துணைப் பொதுச் செயலா்கள் ரவிச்சந்திரன், பழனிவேல், ரவிக்குமாா், பீா் முகம்மது ஷா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT