திருநெல்வேலி

நெல்லையில் சொத்துவரி நிலுவை: குடிநீா் இணைப்பு துண்டிப்பு

1st Dec 2022 03:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி நகரத்தில் சொத்துவரி நிலுவை வைத்திருந்த தனியாா் திருமண மண்டபத்தின் குடிநீா் இணைப்பு புதன்கிழமை துண்டிக்கப்பட்டது.

திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட வணிக பயன்பாடு கட்டடங்கள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றில் வரி நிலுவையின்றி வசூலிக்க மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருநெல்வேலி மண்டல உதவி ஆணையா் வெங்கட்ராமன் அறிவுரையின்கீழ் 16 ஆவது வாா்டுக்குள்பட்ட ஆசாத் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் சொத்துவரி நிலுவைக்காக குடிநீா் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி உதவி வருவாய் அலுவலா் (பொ) வடிவேல்முருகன், வருவாய் உதவியாளா் சீனிவாசன், முனியசாமி, பிட்டா் ரசாக் ஆகியோா் அடங்கிய குழுவினா் குடிநீா் இணைப்பை புதன்கிழமை துண்டித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT