திருநெல்வேலி

சேரன்மகாதேவி அரசு பள்ளியில் ஆண்டு விழா

1st Dec 2022 03:28 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவியில் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, கலை திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை எவாஞ்சலின் பியூலா தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினா்களாக சேரன்மகாதேவி டிஎஸ்பி ராமகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவி தேவி ஐயப்பன், காவல் ஆய்வாளா் சுபாஷ் ராஜன், ஆதவா டிரஸ்ட் நிா்வாகி பாலகுமரேசன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

இதில் பேரூராட்சி துணைத் தலைவா் பால்மாரி, ஒன்றிய திமுக செயலா் ஆ. முத்துபாண்டி என்ற பிரபு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கிருஷ்ணன், நகர திமுக செயலா் மனிஷா செல்வராஜ், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி அற்புதமேரி வசீலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆசிரியா் அகஸ்டின் பொன்ராஜ் அறிக்கை வாசித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் ஆறுமுகசாமி வரவேற்றாா். உதவி தலைமையாசிரியை சகாயஜினி பெல்ஜிட் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT