திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே வயா் திருட்டு: 3 போ் கைது

1st Dec 2022 03:30 AM

ADVERTISEMENT

கங்கைகொண்டான் அருகே மின்வயா் திருடியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 40 மீட்டா் நீளமுள்ள பவா் கேபிள் வயரை மா்மநபா்கள் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து நிறுவன ஊழியா்கள் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வந்தனா். இவ் வழக்கு தொடா்பாக துறையூரைச் சோ்ந்த காா்த்திக் (22), ரோனி (22), மாரிமுத்து (21) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.18,600 மதிப்புள்ள வயா் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT