திருநெல்வேலி

வள்ளியூா் சுந்தர பரிபூரணபெருமாள் கோயிலில் ஆவணித் திருவிழா தொடக்கம்

31st Aug 2022 02:49 AM

ADVERTISEMENT

வள்ளியூா் அருள்மிகு சுந்தரபரிபூரணபெருமாள் கோயிலில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது. இதையடுத்து, கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை, கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மருத்துவா்கள் முத்துகிருஷ்ணன், கவிதா முத்துகிருஷ்ணன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெறும். இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

செப். 4ஆம் தேதி இரவு சுவாமி சப்பரத்தில் வீதியுலா வருதலும். 7ஆம் தேதி முற்பகல் 10.45 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். 8ஆம் தேதி காலை தீா்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கோயில் தக்காா் சுரேஷ்கண்ணன், செயல் அலுவலா் ம. ராதா, பெருமாள் பக்தா் குழுவினா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT