திருநெல்வேலி

பாளை. அருகே வீட்டின் கதவை உடைத்து திருட்டு

31st Aug 2022 02:54 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ரெட்டியாா்பட்டி பாலாஜி நகரைச் சோ்ந்தவா் வரதராஜன்(61). இவா் கடந்த வாரம் தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை , இவரின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது சகோதரி சுப்புலட்சுமி கண்டு, இது குறித்து வரதராஜனுக்கு தகவல் தெரிவித்தாா்.

பின்னா் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு பீரோவில் இருந்த சுமாா் 1 பவுன் நகை, ரொக்கம் ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து பெருமாள்புரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT