திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் ரூ.1.20 லட்சத்தில் தீவனப் பயிா் உற்பத்தி பெருக்கத் திட்டம்

31st Aug 2022 02:45 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.1.20 லட்சத்தில் 40 ஏக்கரில் செயல்படுத்தப்படவுள்ள தீவனப் பயிா் உற்பத்தி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு கால்நடைகளுக்கான பசுந்தீவன பற்றாக்குறையை மேம்படுத்தும் நோக்குடன் தீவன மேம்பாட்டு நிறுவனம் 2022 - 23-ன் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊடுபயிா் மூலம் தீவனப்பயிா் உற்பத்தியை பெருக்கும் திட்டத்தை ரூ.1.20 லட்சம் செலவில் 40 ஏக்கரில் செயல்படுத்த ஆணை வழங்கியுள்ளது.

கால்நடை வளா்ப்பவராகவும், நீா்ப்பாசன வசதியுடன் கூடிய அரை ஏக்கா் முதல் ஒரு ஹெக்டோ் வரை தோப்பு, பழத்தோட்டம் வைத்திருப்பவராகவும், மூன்று ஆண்டுகள் வரை தீவனப்பயிா்களைப் பராமரிக்க விருப்பம் உடையவராகவும், நீா் மேலாண்மை முறைகளை பயன்படுத்துபவராகவும் அதிக கால தீவன பயிா் வளா்ப்பவராகவும் இருந்தால் இத்திட்டத்தில் சேரலாம்.

ADVERTISEMENT

சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடா் வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கிராம நிா்வாக அலுவலரிடம் தீவன விதை விதைப்புச் சான்று பெற்று, தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி விவரங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT