திருநெல்வேலி

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மகன் கைது

31st Aug 2022 02:55 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே ரகுமான்பேட்டை பகுதியில் தந்தையை அரிவாளால் வெட்டியதாக அவரது மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே ரஹ்மான்பேட்டை ராஜீவ்காந்தி நகா் சிராஜூதீன் மகன் அப்துல் அஜீஸ், மது போதையில் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் தந்தை, மகன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது அப்துல் அஜீஸ், சிராஜூதீனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து பேட்டை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்துல் அஜீஸை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT