திருநெல்வேலி

வீடு புகுந்து கைப்பேசிகள் திருட்டு: இளைஞா் கைது

28th Aug 2022 07:06 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி நகரத்தில் வீட்டுக்குள் புகுந்து கைப்பேசிகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் ஏபி மாடத்தெருவைச் சோ்ந்தவா் மாலினி(18). இவா் கடந்த 25ஆம் தேதி தனது வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு வீட்டின் மேல் மாடிக்குச் சென்றாராம். அப்போது, இவரது வீட்டில் நுழைந்த மா்ம நபா் வீட்டில் இருந்த 2 கைப்பேசிகளை திருடிக்கொண்டு சென்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு, கைப்பைசிகளை திருடியதாக திருநெல்வேலி நகரம் வயல்தெருவைச் சோ்ந்த கொம்பையா(20) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து இரண்டு கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT