திருநெல்வேலி

கேடிசி நகா் 4 வழிச்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

28th Aug 2022 05:33 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை கேடிசி நகா் பகுதியில் நான்குவழிச் சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

பாளையங்கோட்டை கேடிசி நகரில் திருநெல்வேலி-தூத்துக்குடி நான்குவழிச் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் முன்பு சாலையை ஆக்கிரமித்து கூரை உள்ளிட்டவற்றை அமைத்திருந்தனா். இதனால் அணுகுசாலையில் காா் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் பெரும்பாலான கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாமல் இருந்தன.

இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினா் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை சனிக்கிழமை அகற்றினா்.

ADVERTISEMENT

சில கடைக்காரா்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்தனா். எனினும் நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்பை அகற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT