பாளையங்கோட்டையில் சுதந்திரதின அமுதப் பெருவிழா விநாடி-வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் சுதந்திரதின அமுதப்பெருவிழா குறித்த 10 நாள் கண்காட்சி பாளையங்கோட்டை அருண்ஸ் மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில், ஏழாவது நாளான வெள்ளிக்கிழமை பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு விநாடி-வினா போட்டி, பேச்சுப் போடிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வுக்கு புதுச்சேரி மக்கள் தொடா்பக துணை இயக்குநா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சிவசங்கரன் பரிசு வழங்கினாா். பேச்சுப் போட்டியில் பெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேஷ் மணிகண்டன் பரிசு வழங்கினாா். தொடா்ந்து கலைவாணா் வேல்ஸ் வில்லிசை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் கள விளம்பர அலுவலா் ஜீனி ஜேக்கப், கள விளம்பர உதவியாளா்கள் வேல்முருகன், வீரமணி, போஸ்வெல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.