சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவரும், சேரன்மகாதேவி சாா் ஆட்சியருமான ரிஷாப் பங்கேற்றுப் பேசினாா். கூட்டத்தில் மருத்துவமனை மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தலைமை மருத்துவா் சாந்தி, மருத்துவா்கள் சாந்தி சுசீந்திரன், அமுதாதேவி, பேரூராட்சித் தலைவி தேவிஐயப்பன், துணைத் தலைவா் மாரி, பேரூராட்சி உறுப்பினா் அன்வா் உசேன், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். பின்னா், மருத்துவமனையில் சாா் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.