திருநெல்வேலி

நெல்லையில் விடுதியில் தங்கிய விவசாயி கொலை: மகன் கைது

27th Aug 2022 12:13 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த விவசாயி வெள்ளிக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், புதுக்குடிஅருகேயுள்ள கம்பனேரியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47), விவசாயியான இவரது மகன் மாரிசெல்வம் (26). இவா்கள் இருவரும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் வியாழக்கிழமை இரவு அறை எடுத்து தங்கினராம்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் மாரிசெல்வம், தனது தந்தை ஆறுமுகத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த மேலப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

மாரிசெல்வத்தை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், பொறியியல் பட்டதாரியான மாரிசெல்வம் தனக்கு பிறந்த 3 மாத குழந்தையை கொலை செய்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். தற்போது பிணையில் வெளியில் வந்த அவா் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால் அவரை சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்த நிலையில், தந்தையை கொலை செய்துள்ளாா்.

இதுகுறித்து மேலும் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT