திருநெல்வேலி

தருவை நீரேற்று நிலையத்தில் ஆய்வு

27th Aug 2022 12:02 AM

ADVERTISEMENT

மேலப்பாளையம் மண்டல நீா்த்தேக்க தொட்டிகளுக்காக தருவையில் தாமிரவருணி ஆற்றங்கரையோரம் வைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தில் மாநகராட்சி குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள மாட்டுசந்தை, சேவியா் காலனி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கான நீரேற்று நிலையம் தருவையில் உள்ளது. இங்கு, மேலப்பாளையம் மண்டலத் தலைவா் கதீஜா இக்லாம் பாசிலா, மேலப்பாளையம் 50 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கே.எஸ்.ரசூல்மைதீன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

நீரேற்று நிலையத்தில் உள்ள மோட்டாா்களின் செயல்திறன், அடிக்கடி நீரேற்றும் பணிகள் பாதிக்கப்படாமல் தடுக்க எடுக்க வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளா் ராமசாமி, இளநிலை பொறியாளா் முருகன் ஆகியோா் நீரேற்று நிலையத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை எடுத்துக் கூறினா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது மேலப்பாளையம் பகுதி செயலா் துபை சாகுல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT