திருநெல்வேலி

ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

27th Aug 2022 12:18 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலரும், திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அபூா்வா ஆய்வு மேற்கொண்டாா்.

சேரன்மகாதேவி வருகை தந்த அவா் , வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தாா். தொடா்ந்து வகுப்பறைக்கு சென்று பள்ளி மாணவா், மாணவிகளிடையே பேசினாா். பாடப் புத்தகத்தில் இருந்து மாணவா்களிடம் கேள்விகள் கேட்டாா். மாணவா்கள் ஆா்வமுடன் பதில் அளித்தனா். மாணவா்களுக்கு கண்காணிப்பு அலுவலா் பாராட்டுத் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிஷாப், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT