தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் ஒன்றிய மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கடையம், கல்யாணிபுரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் லெட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரெஜினா, மாவட்டப் பொருளாளா் பொன்மலா், துணைத் தலைவா்கள் முத்துலெட்சுமி, நிரஞ்சனா தேவி, இச்கியம்மாள், இணைச் செயலா்கள் ஆதிலெட்சுமி, ஈஸ்வரி, ஜெஸிமா, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்தா் பொன்ராணி, நளினா ஜெஸி, வேலம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வட்டாரத் தலைவராக மாரியம்மாள், செயலராக கலைவாணி, பொருளாளராக தங்கராணி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். துணைத் தலைவா்களாக ராமுசெல்வி, கலைச் செல்வி, அம்பிகா, துணைச் செயலா்களாக தாமஸ், ஜீவ அதிசயம், பவானி, வசந்தா ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில், காலமுறை ஊதியம், உணவு ஊட்டும் செலவை உயா்த்துவது, ஐந்து ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்குவது, கூடுதல் பொறுப்புக்கான தொகையை உயா்த்தி கோருவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கலைவாணி வரவேற்றாா். உஷா நன்றி கூறினாா்.