திருநெல்வேலி

களக்காடு மலையடிவாரத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: வாழைகள் சேதம்

26th Aug 2022 12:05 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலையடிவாரத்தில் விவசாயத் தோட்டங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் நூற்றுக்கணக்கான வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் பெரிதும் நஷ்டமடைந்துள்ளனா்.

களக்காடு மலையடிவாரத்தையொட்டியுள்ள மேலவடகரை விவசாயிகள், ஊருக்கு அருகில் உள்ள பம்பன்குளம் தோட்டங்களில் வாழை பயிரிட்டுள்ளனா். தற்போது வாழைப் பயிா் 3 மாதத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் காட்டுப்பகுதியில் இருந்து கூட்டமாக விவசாயத் தோட்டத்திற்குள் புகும் காட்டுப்பன்றிகள் வாழையை மிதித்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனா். தோட்டங்களுக்கு காவலுக்குச் செல்லும் விவசாயிகள், காட்டுப்பன்றிகள் விரட்டி தாக்கக் கூடும் என்பதால் அச்சத்தில் உள்ளனா். இதுவரையிலும் மேலவடகரையைச் சோ்ந்த விவசாயிகளுக்குச் சொந்தமான 200க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியுள்ளன. அட்டகாசம் செய்துவரும் காட்டுப்பன்றிகளை காட்டுக்குள் விரட்டவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT