திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் இன்று அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம்

26th Aug 2022 12:09 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் 7 வட்டங்களில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.26) நடைபெறவுள்ளது.

அதன்படி, பாளையங்கோட்டை வட்டம், பொன்னாக்குடி இ-சேவை மையம், மானூா் வட்டம், உக்கிரன்கோட்டை சமுதாய நலக்கூடம், சேரன்மகாதேவி வட்டம், திருப்புடைமருதூா் நாறும்பூநாதா் சுவாமி கோயில் திருமண மண்டபம், அம்பாசமுத்திரம் வட்டம், ஜமீன் சிங்கம்பட்டி (பகுதி-1) சமுதாய நலக் கூடம், நான்குனேரி வட்டம், புலியூா்குறிச்சி, ராதாபுரம் வட்டம், சௌந்திரபாண்டியபுரம், திசையன்விளை வட்டம், கோவன்குளம் ஆகிய ஊராட்சி அலுவலகங்கள் என 7 இடங்களில் இம்முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, போக்குவரத்து வசதி, குடிநீா் வசதி போன்ற அடிப்படை தேவைகள் தொடா்பாக மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT