திருநெல்வேலி

குடியிருப்பு மேம்பாட்டுப் பணிகள்:வீட்டுவசதி வாரிய தலைவா் ஆய்வு

26th Aug 2022 12:08 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாநகரில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கீழ் பாளையங்கோட்டை வட்டம், குலவணிகா்புரம் கிராமத்தில் 892 வீட்டு வசதி வாரிய மனை குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவா் பூச்சி எஸ்.முருகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஏழை, நடுத்தர மக்கள் வாங்கும் வகையில் மனைகள் பிரிக்கப்பட்டுள்ளதா, கழிவுநீரோடை, சாலை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அவா், முழு பணிகளையும் விரைவாக முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு. அப்துல் வஹாப், திருநெல்வேலி வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் பாண்டியராஜன், உதவி பொறியாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT