திருநெல்வேலி

தச்சநல்லூரில் அரசு பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்

26th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி தச்சநல்லூரில் அரசு பேருந்து ஓட்டுநா் தாக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேனியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து புதன்கிழமை வந்து கொண்டிருந்தது. பேருந்தில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த சந்திரன் (52) ஓட்டுநராக பணியில் இருந்தாா். தச்சநல்லூா் அருகே வந்தபோது சநதிரனுக்கும், எதிரே சுமை ஆட்டோவில் வந்த கொக்கிரகுளம் தொல்காப்பியா் தெருவை சோ்ந்த ரவிக்கும் (55) இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இந்நிலையில், சுமை ஆட்டோவில் இருந்த இரும்புக் கம்பியால் ரவி தாக்கியதில் சந்திரன் காயமடைந்தாா்.

தகவல் அறிந்த தச்சநல்லூா் போலீஸாா் சந்திரனை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ரவியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். இச் சம்பவத்தால் அப் பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT