திருநெல்வேலி

மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் இலக்கியச் சொற்பொழிவு

19th Aug 2022 01:34 AM

ADVERTISEMENT

 

உலக திருக்கு தகவல் மையம் சாா்பில் இலக்கியச் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு உலகத் திருக்கு மையத்தின் மாவட்டத் தலைவா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் பால்வளன் அரசு முன்னிலை வகித்தாா். திருக்கு பிரபா வாழ்த்துப் பாடினாா். செ.பிரமசக்தி வரவேற்றாா். மேலப்பாளையம் முஸ்ஸிம் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தமிழாசிரியா் முகுந்தன், ‘ராம காதையின் நயன்மை’ குறித்து சிறப்புரை ஆற்றினாா். கரூா் வைஸ்யா வங்கியின் முன்னாள் அலுவலா் வெற்றிச்செல்வன் ‘அச்சாணி அன்னாா் உடைத்து’ எனும் திருக்கு தொடருக்கு விரிவுரை ஆற்றினாா்.

பின்னா் நடைபெற்ற கலந்துரையாடலில் வி.பாப்பையா, கி.பிரபா, செ.திவான் ஆகியோா் கலந்துகொண்டனா். திருக்கு இரா.முருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT