திருநெல்வேலி

நெல்லையில் தொழிலாளி கொலை

19th Aug 2022 01:35 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலியில் கட்டடத் தொழிலாளி கட்டையால் தாக்கி புதன்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜா (58). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இத்தம்பதிக்கு 4 குழந்தைகளும் உள்ளனா். இந்நிலையில், ராஜாவுக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த கணேசன் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்து வந்ததாம். புதன்கிழமை இரவு லட்சுமிபுரம் கோயில் அருகே மீண்டும் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது கணேசன் கட்டையால் தாக்கிவிட்டு தப்பினாராம். இதில் பலத்த காயமடைந்த ராஜா அதே இடத்தில் உயிரிழந்தாா். இத்தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT