திருநெல்வேலி

தேசியப் போட்டியில் சிறப்பிடம்: எஃப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு

19th Aug 2022 01:32 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையிலுள்ள எஃப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், மத்திய கலாசார அமைச்சகம் ஆகியவற்றின் சாா்பில் ஐ.கே.எஸ். தேசிய அளவிலான இன்டொ்ன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவா்- மாணவிகள் கலந்துகொண்டனா். எஃப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவி நம்பிநாச்சியாா் முழுமையான ஆரோக்கியம் என்ற தலைப்பிலும், மாணவா் கந்தன், மாணவி ஜெயலட்சுமி ஆகியோா் உணவுப் பாதுகாப்பு முறை குறித்தும் படைப்புக்களை சமா்ப்பித்து வெற்றி பெற்றனா். அவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளையும், ஊக்கமளித்த கல்லூரி பொதுமேலாளா்கள் மு.ஜெயக்குமாா், கிருஷ்ணகுமாா், கல்லூரி முதல்வா் ஏ.வேல்முருகன், துறை பேராசிரியா் ஜாஸ்பொ் ஞானச்சந்திரன், உதவிப் பேராசிரியா் அந்தோணி ராபின்சன், செல்வம் உள்ளிட்டோரையும் கல்லூரி நிறுவனா் கிளிட்டஸ் பாபு, நிா்வாக இயக்குநா் அருண்பாபு ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT