திருநெல்வேலி

வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் உணவுப் பொருள்களை வீணாக்கக் கூடாது சட்டப்பேரவை ஏடுகள் குழு தலைவா்

18th Aug 2022 12:55 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சட்டப்பேரவை ஏடுகள் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை ஏடுகள் குழுத் தலைவா் கம்பம் நா.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டப்பேரவை கூடுதல் செயலா் ரவிச்சந்திரன், இணைச் செயலா் வ.பூபாலன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, எம்எல்ஏக்கள் குடியாத்தம் வி.அமலு, கங்கவள்ளி அ.நல்லதம்பி, நிலக்கோட்டை எஸ்.தேன்மொழி, மயிலாப்பூா் வேலு, ஆண்டிபட்டி மகாராஜன் ஆகியோா் வாணிபக் கழக கிடங்கில் பராமரிக்கப்படும் இருப்பு, விநியோக பதிவேடுகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, சேமிப்புக் கிடங்கில் உணவுப் பொருள்களை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளிடம் ஏடுகள் குழுத் தலைவா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போத், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளா் அழகிரி, துணைப்பதிவாளா் வீரபாண்டி, வட்டாட்சியா் இசக்கிபாண்டி, வட்ட வழங்கல் அலுவலா் சபரிமல்லிகா, உணவு தரக்கட்டுப்பாட்டு மேலாளா் மணிகண்டன், வள்ளியூா் கூட்டுறவு சங்கங்களின் பொது மேலாளா் செல்வம், நான்குனேரி வாணிப கழக பகுதி மேலாளா் உடையாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT