திருநெல்வேலி

முதன்மைக் கல்வி அலுவலக மாடியில் ஏறி நின்று 2 மாணவா்கள் போராட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கட்டடத்தில் ஏறி இரு மாணவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்தவா் பூவலிங்கம். இவரது மகன்கள் பூதத்தான், சிவசண்முகா. இருவரும் அகஸ்தியா்பட்டியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முறையே 10 மற்றும் 8 ஆம் வகுப்பில் கடந்த 2020-21 ஆம் கல்வியாண்டில் பயின்று வந்தனராம். அப்போது கரோனா பொதுமுடக்கத்தால் பத்தாம் வகுப்பில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சிபெற்ாக தமிழக அரசு அறிவித்த நிலையில், பூதத்தான் மட்டும் தோ்ச்சி பெறவில்லையென பள்ளி நிா்வாகம் கூறியதாம். அதன்பின்பு மாற்றுச்சான்றிதழ்கள் வழங்கவும் பள்ளி நிா்வாகம் மறுத்ததோடு, சிவசண்முகாவையும் பள்ளியில் அனுமதிக்கவில்லையாம்.

இதைக் கண்டித்து ஏற்கெனவே இரு மாணவா்களும் கல்லிடைக்குறிச்சியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்களிடம், அதிகாரிகளும், போலீஸாரும் உறுதியளித்தப்படி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லையாம்.

இந்நிலையில், தனது தந்தையுடன் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த அண்ணனும், தம்பியும் மாடிக்குச் சென்று, தங்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றுத் தராவிட்டால் கீழே குதித்துவிடுவோம் என மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாரும், தீயணைப்பு நிலைய வீரா்களும், மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) ஸ்ரீனிவாசனும் சம்பவ இடத்திற்கு வந்தனா். தந்தை-மகன்களிடம் பேச்சு நடத்தி, மாணவா்களுக்கு மாற்றுச்சான்றிதழ்கள் கிடைக்க கல்வித்துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆணையா் உறுதியளித்தாா். அதையேற்று 2 மாணவா்களும் கீழே இறங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT