திருநெல்வேலி

பாளை. யில் ஆயிரத்தமன் கோவில் கொடை விழா

17th Aug 2022 03:28 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை தெற்குபஜாா் பகுதியில் உள்ள அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட இக்கோயில் கொடை விழாவில், அம்பாளுக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்தனா். தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT