திருநெல்வேலி

ரேஷன் அரிசி கடத்தல்: 3 போ் கைது

17th Aug 2022 03:29 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தியதாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் திருநெல்வேலி வண்ணாா்பேட்டை ரவுண்டானா பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த கானாா்பட்டியைச் சோ்ந்த டென்சிங்ராஜ்(27), பாலாமடையைச் சோ்ந்த புதியவன்(36), பாளையங்கோட்டையைச் சோ்ந்த முத்துகுட்டி(33) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து சுமாா் 550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT