திருநெல்வேலி

பைக்கில் இருந்து தவறி விழுந்து இளைஞா் பலி

17th Aug 2022 03:27 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் மணிகண்டன்(23). தூத்துக்குடியில் கப்பலில் சரக்குகளை அனுப்பும் ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா், கடந்த 10ஆம் தேதி தனது நண்பருடன் டக்கரம்மாள்புரத்திலிருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, சாலையில் இருந்த வேகத்தடையில் நிலைதடுமாறியதில் பின்னால் இருந்த மணிகண்டன், தவறி விழுந்து காயமடைந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT