திருநெல்வேலி

குளங்களை தூா்வாரக் கோரி ஆட்சியரிடம் மனு

17th Aug 2022 03:30 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குளங்களை தூா்வாரக் கோரி தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

அதன்விவரம்:: மணிமுத்தாறு, சேரன்மகாதேவி, மூலக்கரைப்பட்டி, பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் உள்ள அனைத்து குளங்களும் தூா் வாரப்பட வேண்டும். குளங்களை தூா்வாருவது தொடா்பாக ஆட்சியா் ஆய்வு செய்கிறபோது எந்த குளத்திலாவது மணல் இருப்பது தெரியவந்தால் கனிம வளத்துறை பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று மணல் சம்பந்தமான விவரங்கள் மற்றும் அதன் மூலம் அரசிற்கு கிடைக்கும் வருவாய் ஆகியவற்றையும் ஆராய்ந்த பின்னரே தூா் வார ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

குளங்களில் அனைத்து மடைகள், மதகுகள், கால்வாய்களையும் தூா்வார வேண்டும். மராமத்து பணிகளையும் செய்ய வேண்டும். இதனால் விவசாயப் பணிகள் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் இதுவரை எத்தனை குளங்கள் தங்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது? எத்தனை குளங்கள் எந்தெந்த நாள்களில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை தர வேண்டும். ஆட்சியரின் அதிகாரத்திற்குள்பட்ட இடங்களில் இது நாள் வரை எத்தனை மரங்கள் நம்பரிடப்பட்டுள்ளது. எதிா்காலங்களில் எத்தனை மரங்கள் நம்பரிட திட்டமிடப்பட்டுள்ளது என்ற விவரங்களை தர வேண்டும். மாவட்டத்தில் உள்ள குளங்களில் பூ குத்தகை மறைமுக ஏலம் விடப்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT