திருநெல்வேலி

தற்காலிக குடியிருப்பு கோரி தா்னா

17th Aug 2022 03:33 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அம்பேத்கா்காலனி மக்களுக்கு தற்காலிக குடியிருப்பு வழங்கக்கோரி மாநகராட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை அம்பேத்கா் காலனியில் அருந்ததியா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமாா் 100 குடும்பங்களைச் சோ்ந்த 2,500 போ் வசிக்கின்றனா். இந்நிலையில், பழைய கட்டடங்களை அற்றிவிட்டு அதே இடத்தில் புதிய குடியிருப்புகள்அமைத்து தருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதற்கு வாடகை மானியமாக ரூ.24 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டடம் கட்டி முடிக்க சுமாா் 5 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. ஆகவே, தங்களுக்கு தற்காலிக குடியிருப்பு கட்டித்தரக் கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநகா் மாவட்டச் செயலா் கோ.துரைப்பாண்டியன் தலைமையில் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகளும், பொதுமக்களும் மாநகராட்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்து தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா் மேயரிடம் மனு அளிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT