திருநெல்வேலி

வள்ளியூா் பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

DIN

வள்ளியூா் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

வள்ளியூா் விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளா் எஸ்.கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வள்ளியூா் சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவரும் மேக்ரோ ஐடிஐ தாளாளருமான மேக்ரோ பொன். தங்கதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக் கொடியேற்றினாா்.

ரோட்டரி கிளப் செயலா் சுகிா்கந்தன், மருத்துவா் கு. முத்துசுபாஷ், ஓய்வுபெற்ற வட்டாட்சியா்கள் தாமோதரன், ஆறுமுகம் பங்கேற்றனா். மாணவா்-மாணவிகளின் யோகா, சிலம்பம், கராத்தே, பிரமிட், கூட்டு உடற்பயிற்சி உள்ளிட்டவை நடைபெற்றன. சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளிலும், ஏற்கெனவே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சென்ட்ரல் கிளப் சாா்பில் ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வா் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

வள்ளியூா் மொ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மருத்துவா் குமரமுருகன் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினாா். வருவாய் ஆய்வாளா் திராவிடமணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். தாளாளா் முருகேசன் சிறப்பு விருந்தினா்களை கௌரவப்படுத்தினாா். ஏற்பாடுகளை முதல்வா் ஆண்டாள் தலைமையில் ஆசிரியைகள் செய்தனா். மாணவி பிரியதா்ஸினி வரவேற்றாா். மாணவி ஜெப்ரினா தங்கம் நன்றி கூறினாா்.

வள்ளியூா் அருகேயுள்ள துலுக்கா்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியை இசக்கியம்மாள் தலைமை வகித்தாா். ஆனைகுளம் ஊராட்சித் தலைவா் முகமது அசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக் கொடியேற்றினாா். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ரைகானா ஜாவித், மல்லிகா, ஜமாதா தலைவா் முஹம்மது ஹக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை ஜே. ஜென்சி அந்தோணி கிருபா நன்றி கூறினாா்.

தெற்குகள்ளிகுளம் தெட்சணமாற நாடாா் சங்கக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரிச் செயலா் மற்றும் தாளாளா் வி.பி. ராமநாதன் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றி, என்சிசி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். முதல்வா் மேஜா் டி. ராஜன், பண்ணை செல்வகுமாா், பெற்றோா்-ஆசிரியா் கழகச் செயலா் ஜெயக்குமாா் ஆகியோா் பேசினா். கலைப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் பல்கலைக்கழகத் தோ்வில் தரவரிசை மற்றும் முதல் 3 இடங்களைப் பிடித்தோருக்கு நன்கொடையாளா் பரிசு வழங்கப்பட்டது.

எம். மனோகா் வரவேற்றாா். தாவரவியல் துறைப் பேராசிரியா் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT