திருநெல்வேலி

பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் பலி

16th Aug 2022 04:19 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே மோட்டாா் சைக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் இசக்கிதுறை(20). இவா் தனது நண்பரான கம்மாளங்குளத்தைச் சோ்ந்த கனகராஜ் என்பவருடன் ஒரே மோட்டாா் சைக்கிளில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் மானூா் அருகே உள்ள துலுக்கா்பட்டி-நரியூத்து சாலையில் சென்றுகொண்டிருந்தனராம். அப்போது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்தகாயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT