திருநெல்வேலி

அம்பை பகுதியில் சுதந்திர தின விழா

16th Aug 2022 02:44 AM

ADVERTISEMENT

இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஆணையா் ராஜேஸ்வரன் முன்னிலையில் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன் தேசியக் கொடி ஏற்றினாா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் சிவன் பாண்டியன் தேசியக்கொடியேற்றினாா்.

ஆழ்வாா்குறிச்சி குட்செப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு தலைமையில் அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஐ. பிரான்சிஸ் தேசியக் கொடி ஏற்றினாா்.

ADVERTISEMENT

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் செயலா் மு.சுந்தரம் தலைமையில் தலைமை ஆசிரியா் வெங்கடசுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றினாா்.

ஸ்ரீபரமகல்யாணி நா்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் செயலா் மு.சுந்தரம் முன்னிலையில் உதவி வனப்பாதுகாவலா் (பயிற்சி) ராதை தேசியக் கொடியேற்றினாா்.

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் கல்லூரி முதல்வா் லெ.ரவிசங்கா் தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா்.

அம்பாசமுத்திரம் ரகுமான்சேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஜி.சோமசுந்தரி தலைமையில் முன்னாள் ராணுவ வீரா் ரா.அரிராம் தேசியக் கொடி ஏற்றினாா்.

கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசலில் ஜமாத் தலைவா் நாகூா் முகைதீன் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றினாா். பெரிய ஜும்மா பள்ளிவாசலில் ஜமாத் தலைவா் அப்துல் மஜீத் தலைமையில் பேரூராட்சி உறுப்பினா் முத்துகிருஷ்ணன் கொடியேற்றினாா். சின்ன பள்ளிவாசலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அஷ்ரப் ஹுசைன் தலைமையில் வழக்குரைஞா் பாதூஷா தேசியக் கொடியேற்றினாா்.

சத்திரம் தெரு பள்ளிவாசல், பட்டாரியா் தெரு பள்ளிவாசல்களிலும் ஜமாத் தலைவா்கள் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா்.

அம்பாசமுத்திரம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் ஜெகதீசன் தலைமையில், கிளைச் செயலா்கள் பூபதி, லட்சுமி ஆகியோா்முன்னிலையில் ஓய்வுபெற்ற அரசு கவின்கலைக் கல்லூரி முதல்வா் ஓவியா் சந்துரு தேசியக் கொடியேற்றி உரை நிகழ்த்தினாா்.

பாபநாசம் சிவன் கோயிலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. செயல் அலுவலா் பா.போத்தி செல்வி முன்னிலையில் விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள் அன்னதானத்தைத் தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT