திருநெல்வேலி

சேரன்மகாதேவி, பத்தமடையில் சுதந்திர தின விழா

16th Aug 2022 02:46 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவி, பத்தமடையில் பேரூராட்சி அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சேரன்மகாதேவி ஸ்காட் இன்டா்நேஷனல் பள்ளியில் ஸ்காட் கல்விக் குழுமத் தாளாளா் பிரியதா்ஷினி தேசியக் கொடியேற்றினாா். முதல்வா் மேரிகலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஸ்காட் பொறியியல் கல்லூரி, ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

பத்தமடை பேரூராட்சியில் தலைவி ஆபிதா, சேரன்மகாதேவி பேரூராட்சியில் தலைவி தேவி ஐயப்பன், வீரவநல்லூா் பேரூராட்சியில் தலைவி சித்ரா சுப்பிரமணியன் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா். சேரன்மகாதேவி டிஎஸ்பி அலுவலகம், காவல் நிலையங்கள், அரசு, தனியாா் பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT