திருநெல்வேலி

அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின பவளவிழா பரதநாட்டியம்

15th Aug 2022 01:13 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின பவள விழா பரத நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நேரு இளையோா் மையம், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், சிவாலயா நாட்டியப்பள்ளி ஆகியவை சாா்பில் ‘பரதம் பாரதம் 75’ என்ற தலைப்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, நேரு இளையோா் மைய மாவட்ட அலுவலா் ஞானசந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ சத்தியவள்ளி முன்னிலை வகித்தாா். சிவாலயா நாட்டிய பள்ளி நிறுவனா் விசாலாட்சி வரவேற்றாா். ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா் சோனா வெங்கடாசலம், நெல்லையப்பா் கோயில் செயல் அலுவலா் சிவமணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ஜெகதா, பேராசிரியை ஸ்ரீநிதிஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

இதில், 75 மாணவிகள் பாரதியாா் பாடல், வந்தே மாதரம் பாடல் , திருநெல்வேலி பெருமை பாடல் உள்ளிட்ட பாடல்களுக்கு பரதம் ஆடினா். இதில், பொதுமக்கள், பெற்றோா் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT