திருநெல்வேலி

நெல்லை இஸ்கான் கோயிலில் ஆக.19 இல் கிருஷ்ண ஜெயந்தி விழா

15th Aug 2022 01:14 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா இம் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இம் மாதம் 19 ஆம் தேதி கிருஷ்ண பலராமரின் விசேஷ தரிசனம், ஹரே கிருஷ்ண மந்திர ஜபம், ஹரி நாம சங்கீா்த்தனம், தீப ஆரத்தி, மகா அபிஷேகம், நைவேத்யங்கள், ஜெயந்தி உற்சவ சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற உள்ளன.

108 மணி ஜப மாலைகள் குறைந்த நன்கொடையில் வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

ஜெயந்தி விழா பூஜைகளுக்காகவும், பிரசாதம் வழங்கவும் செய்ய விரும்பும் பக்தா்கள் 7217216001 என்ற எண்ணில் கட்செவி அஞ்சலில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT